Hello friends, I'm Chikkoo signing in again. Wish you all a very happy new year, 2014! Let this and the forthcoming years be happy, prosperous, peaceful and healthy to all of you! Prosperity and peace bring happiness. We can really be happy, only if we are hale and healthy. Health is the greatest wealth, you know?
Regarding our health, awareness about the Dos and Don'ts is very much essential. This awareness helps us a lot from the beginning till the end, ie., from the safe pregnancy followed by a safe delivery, the healthy upbringing of the kids, keeping them informed about what all we know and have learnt by our own experiences and opening all possible doors for them for learning more and more to equip and safeguard themselves against health problems, thus enabling them to contribute in building a healthy society, both physically and mentally.
So many terrible diseases like smallpox, hooping cough, Tetanus. Polio and many other such diseases have almost been eradicated by administering periodical vaccination, injections or oral drops etc..
Now..if we are ignorant of or indifferent towards taking such precautionary measuress, what will happen? So many living examples are there. One such example is our Mangai, in the short story 'Dhandikkappadum thaLirgaL' meaning 'kids who are punished'. It was the first story written and presented through AIR by my friend, Gowri (Kukkoo) in 1985 approximately. Mangai is not an imaginary character, but a living person.
The child Rani and her feelings, ..what all she goes through..Please read her story in Tamil and publish your comments on this..
தண்டிக்கப்படும் தளிர்கள் (கௌரி கிருபாநிதி)
(written and presented thro" AIR in 1986)
தம்பி ரவி பள்ளியிலிருந்து வந்து விட்டான். மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது ராணிக்கு. ரவியின் கையில் ஒரு புதிய பந்து.
"அப்பா வாங்கிக் கொடுத்தாரு ராணிக்கா.."
"கொஞ்ச நேரம் என்னோட விளையாடறியா ரவி?"
அக்காவுடன் பந்தை உருட்டி விளையாடுகிறான். வீட்டுக்காரம்மா கொடுத்த பாலை இருவரும் குடிக்கிறார்கள். பிறகு ரவி நண்பர்களுடன் விளையாட மேல் மாடிக்குப் போய் விடுகிறான். சற்றுத் தொலைவில் பெண் குழந்தைகள்
'ஸ்கிப்பிங்' விளையாடுகிறார்கள். அவர்கள் ஆட்டத்தை ராணியின் ஏக்கம் தோய்ந்த விழிகள் பார்க்கின்றன. இனி அம்மா வரும் வரை, தன்னைச் சுற்றித் துடிப்புடன் இயங்கும் உலகை வேடிக்கைப் பார்ப்பதிலேயே அவள் பொழுதைக் கழித்து விடுவாள். பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள், பெரியவர்கள், வண்டிகள், கடைத் தெருக்களின் கலகலப்பு என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் காட்சிகளைக் காணும்போது, அவள் மனம் சிறகடித்துப் பறக்கிறது. வாசலில் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, 'கீய் கீய்' என்று சத்தமிடும் காலணிகளை அணிந்து கொண்டு, குதித்து குதித்து நடக்கும் பிஞ்சுக் குழந்தையின் வெண்மையான பஞ்சுப் பாதங்களைப் பார்க்கும் பார்க்கும்போது, அவற்றை அள்ளி முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. உடனே தன்னை இப்படி முடக்கி வைத்திருக்கும், தன் சிறுத்துச் சூம்பிய பொம்மைக் கால்களைப் பார்த்துக் கொள்கிறாள். தம்பியின் பையிலிருந்து அவன் புத்தகத்தை எடுத்து, அதைப் பார்த்து அம்மா கொடுத்திருக்கும் தன் நோட்டுப் புத்தகத்தில், சொற்களை ஒவ்வொன்றாக எழுதுகிறாள்.
காற்று வேகமாக வீசுகிறது. தம்பியின் புத்தகத்தில் கிழிந்த ஒரு தாள் பறந்து செல்கிறது. "ஐயோ!" பரபரவென்றுக் கால்களைத் தேய்த்து, தாளைப் பிடிக்க நகர்கிறாள்.
"சாந்தி! அந்த பேப்பரை பிடிச்சுக் கொடுக்கறியா?"
ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்த சாந்தி பறக்கும் தாளைப் பிடித்து ராணியிடம் தருகிறாள்.
"திருப்பித் திருப்பிப் பறக்க விட்டால் எடுத்துத் தர மாட்டேன். உனக்கேன் இதெல்லாம்? சும்மா உட்கார வேண்டியதுதானே?"
ராணியின் முகம் வாடுகிறது. இது அவளுக்குப் புதிதல்ல. எல்லோரும் சொல்வதைப் பார்த்து, "ஒன், டூ, பக்கில் மை ஷூ.." என்று 'ரைம்ஸ்' சொல்லா ஆரம்பித்து, "நொண்டி ராணி..." என்ற ஏளனம் எதிர்ப்பட்டதும், உற்சாகம் வடிந்து, கூட்டுக்குள் நத்தையாக சுருங்கி விடுவாள். அந்த ஆறு வயதுக் குழந்தையின் மனத் தழும்புகள், அதற்கு வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியை அளித்திருந்தன. தூரத்தில் தெரியும் மலைக் கோட்டையை பார்க்கிறாள் ராணி. முகத்தில் ஆயிரம் மௌனப் புலம்பல்கள் தெரிகின்றன.
திருச்சி மலைக் கோட்டைக்கருகில், அந்த வீட்டின் வராந்தாவில்தான், ராணி நாளின் பெரும்பகுதியை கழிக்கிறாள். அவள் அப்பா சண்முகம், நான்கு தெரு தள்ளி, ஒரு வாடகை சைக்கிள் கடை நடத்துகிறார். அம்மா மங்கை, வயலூர் சாலையில் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள். விடிகாலை சமையல் வேலைகளை முடித்து, ராணியை குளிப்பாட்டி உணவளித்து, வராந்தாவில் உட்கார்த்தி வைத்து விட்டு, வீட்டுக்கார அம்மாளிடம் சொல்லி விட்டு ஓடுவாள். சண்முகம் ரவியைத் தயார் செய்து, சாப்பிட்டதும் பள்ளியில் விட்டு விட்டுக் கடைக்குச் செல்வான். மாலை, அந்த வீட்டுக் குழந்தைகளுடன் ரவி வீடு திரும்பி விடுவான். ஏழு மணி சுமாருக்கு அம்மா வருவாள்.. அவளைத் தூக்கித் தன் போர்ஷனுக்கு எடுத்துச் செல்வாள். வேலைகளைச் செய்து கொண்டே, அவளுடன் பேசுவாள். அவளைத் தன் அன்பு மழையால் குளிப்பாட்டுவாள். இரவு ராணியைக் கட்டிக் கொண்டு படுப்பாள். அடிக்கடி, அம்மாவின் சூடான கண்ணீர்த் துளிகள் ராணியின் கழுத்தை நனைக்கும்.
காலையில் சண்முகம் ரவிக்கு எல்லாம் செய்து விடுவான். ராணியை கவனிக்கும் பொறுப்பு மங்கையுடையதுதான். விடுமுறை நாட்களில் ரவிக்கு ஜோராக 'ட்ரெஸ்' செய்து, தன் தோளில் உட்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்குச் செல்வான். ராணிக்குப் பொறாமையே எழாது. அவள்தான் கீழ் வீட்டு டி.வி.யில் சினிமா பார்க்கிறாளே! அவளுக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. 'எல்லோரும் கூட்டமாக ஏறிப் பார்க்கும் மலைக் கோட்டைப் பிள்ளையாரைத் தானும் பார்க்க வேண்டும்!'
எலும்பும், தோலுமான அம்மாவுக்கு வீட்டிலும், வெளியிலும் உழைக்கவே நேரம் போதவில்லை. 'அப்பா தன்னை ஒரே ஒரு முறைத் தூக்கிச் சென்று, பிள்ளையாரைக் காட்டக் கூடாதா' என்று ஏங்குவாள். சண்முகம் கோயிலுக்கேப் போக மாட்டான். ராணியின் ஆசை பற்றி ஒரு முறை மங்கை சொன்னபோது, "ஆமாம், கடவுள் நமக்கு ஒரு பொண்ணைக் கொடுத்திருக்கற லட்சணத்துக்கு, ஏறிப் போய் வேறப் பார்க்கணுமாக்கும்.." எனச் சீறினான்.
களிமண்ணில் ஒரு குட்டி மலை செய்து, அதன் மேல் அம்மா தனக்கு வாங்கித் தந்த பிள்ளையார் பொம்மையை, ராணி வைத்துக் கொண்டிருக்கிறாள். குட்டி மலையின் படிகளின் மேல் தன் கை விரல்களைப் பதித்து, படிகளைக் கடந்து, மேலே இருக்கும் பிள்ளையாரை எண்ணற்ற முறை அடைந்திருக்கிறாள். அப்போதெல்லாம் அக்குழந்தையின் உள்ளம், எதையோ சாதித்து விட்டது போல், அபரிமிதமான மகிழ்ச்சியையும், நிறைவையும் அனுபவித்திருக்கிறது.
மறுநாள் அந்த வீட்டின் மாடிக்குப் புதிதாக ஒரு தம்பதிகள் குடி வருகிறார்கள், ஒரு மளிகைக் கடை முதலாளியும், அவரது 'டீச்சர்' மனைவியும். குழந்தைகள் ஏதும் இல்லை.
அன்று மாலை, ராணியருகில் வந்த டீச்சர், அவள் நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறாள். "அழகா எழுதியிருக்கியே, வெரி குட்.." என்கிறாள். அம்மாவுக்கு அடுத்தபடியாக, தன்னிடம் வலிய வந்து அன்புடன் பேசும் டீச்சரம்மாவை, ராணி வியப்புடன் பார்க்கிறாள். உடைப்பெடுத்த வெள்ளம் போல், தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லியும், எழுதியும் காண்பிக்கிறாள்.
இரவு டீச்சரம்மா, ராணியைப் பற்றி மங்கையிடம் கேட்கிறாள். மங்கை வழக்கம் போல் பொங்கி அழுகிறாள். ஆறு மாதக் குழந்தை ராணியின் ஃபோட்டோவை எடுத்துக் காண்பிக்கிறாள். "எப்படி இருக்குது பார்த்தீங்களா அக்கா? இதுக்கு இந்த கதி வர நானே காரணமாயிட்டேன். தடுப்பூசி, போலியோ மருந்து ஒரு தடவை கொடுத்தாங்க. அடுத்த தடவை..இதுக்கு நல்ல ஜுரம், பேதி. எனக்கும் வயித்திலே ரவி நாலு மாசம். ஏற்கனவே லீவ் நிறைய போட்டாச்சு. அப்போ ராணியோட ஆயா இங்கே இருந்தாங்க.
"நானும் மூணு பெத்து, வளர்த்தேன். ஒரு ஊசி, மருந்து கொடுக்கலே. எல்லாரும் கல்லு குண்டாகத்தான் வளர்ந்தாங்க. மருந்தும் வேணாம், ஊசியும் வேண்டாம்" னாங்க. இவருக்கும் முரட்டு சுபாவம். சண்டைக்குப் பயந்து, பாவி நான், அடுத்த டோஸ் எல்லாம் ராணிக்குக் கொடுக்கலே. நல்லா இருந்த பொண்ணோட காலும், வாழ்க்கையும் இப்படி முடங்கிப் போக, நானே காரணமாயிருந்துட்டேன். இப்ப கூட இதை எங்கேயாவது காண்பிச்சு சரி செய்ய மாட்டோமான்னு தவிக்கிறேன். வயித்துப் பாட்டுக்கு அல்லாடவே வாழ்க்கை சரியாப் போயிடுது. இவர் வருமானத்துலே முக்காலும் சிகரெட்டுக்கும், சினிமாவுக்குமே சரியாயிருக்கும். இவளைக் கண்டாலே வெறுக்கிறார்க்கா. நான் என்ன கோட்டை கட்ட முடியும்? சொல்லுங்க.. இவளுக்குப் படிக்க எவ்வளவு ஆசை தெரியுமா?"
மங்கையை டீச்சரம்மா சமாதானப் படுத்துகிறாள், "இனிமே அழுதுப் பயனில்லே. ராணி ரொம்ப கெட்டிக்காரி. தினம் ராத்திரி ஒரு மணி நேரம் எங்கிட்டே விடு. அதுக்கு நான் படிப்பு சொல்லித் தரேன்.."
மங்கை மகிழ்ச்சியில் திக்கு முக்காடுகிறாள்.
மூன்று மாதங்கள் ஆகி விட்டன. ஏற்கனவே அம்மாவிடமிருந்து ஓரளவு கற்றிருந்த ராணி, வெகு விரைவில் வாக்கியங்களை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டு விட்டாள். இப்போதெல்லாம் அவள் ரவிக்குக் கூட சொல்லித் தருகிறாள்.
அவளுக்குள் ஒரு புதிய சாளரம் திறந்து கொள்கிறது. டீச்சரம்மாவின் அன்பு, தென்றலின் வருடல் போல், அவளுக்கு இதமளிக்கிறது. அறிவுச் செல்வத்தை அள்ளிப் பருகுவதில், தன் உள்ளத்தின் வேட்கைகளையெல்லாம் தணித்துக் கொள்கிறாள் ராணி.
"ராணி மாதிரி ஒரு புத்திசாலிக் குழந்தை கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும், மங்கை. கவலைப்படாதே. போகப் போக இன்னும் வேறே அவளுக்கு என்ன செய்யலாம்னு யோசிப்போம்..."
"என் பிரச்னை அவங்களுக்கு ஒட்டிக்குமோன்னு, உறவுக்காரங்க எல்லாரும் ஒதுங்கி ஓடறாங்க. நான் என்ன சொல்றது? அகிலாண்டேஸ்வரித் தாயாரே நீங்கதாங்க்கா..." மங்கை தழுதழுக்கிறாள்.
அன்று ராணியின் பிறந்த நாள். காலை அம்மா செய்து கொடுத்த இனிப்பின் சுவை, ராணியின் நாவிலேயே இன்னும் இருக்கிறது. அம்மா தனக்கு ஆசையோடு அணிவித்திருந்த புது கவுனைப் பெருமையோடு பார்த்துக் கொள்கிறாள்.
மறு நாள் மதுரையில் பெரிய அத்தையின் பெண்ணுக்குக் கல்யாணம். அப்பா அதற்காக ரவியை அழைத்துக் கொண்டு, மதுரை சென்றிருக்கிறார்.
இனி அம்மா வரும் வரை என்ன செய்வது? திண்ணையோரம் குவிக்கப் பட்டிருந்த கற்களிலிருந்து ஏழு சிறு கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, தானே தனியாக விளையாடத் தொடங்குகிறாள் ராணி.
சிறிது நேரத்தில் டீச்சரம்மா, அவர்கள் கடைப் பையனுடன் ராணியிடம் வருகிறாள்.
"ராணிக்குட்டிக்கு ஒரு 'ஸர்ப்ரைஸ்'. இன்னிக்கு மலைக் கோட்டைப் பிள்ளையாரைப் பார்க்கப் போறோம். உங்கம்மாகிட்டே காலையிலேயே
சொல்லிட்டேன்..."
ராணியைத் தூக்கிக் கொள்ளக் கடைப் பையன் கையை நீட்டுகிறான். ராணியால் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. தன் பிள்ளையார் பொம்மையைப் பார்க்கிறாள், மானசீகமாகப் பேசுகிறாள்...
"நிசமாவே நான் உன்னைப் பார்க்கப் போறேனா?..."
ராணியின் அழகிய புருவங்கள் விரிகின்றன.
வண்ண மயமான கற்பனைகள் நிறைந்த அவள் உலகம், எங்கோ தொலைவிலிருந்து அவளை நோக்கி நெருங்கி வருகிறது.
தண்டிக்கப்பட்ட ஒரு தளிரின் நெஞ்சத்தில், நம்பிக்கை அரும்பு மெல்லத் தலை தூக்கிப் பார்க்கிறது.
------------------------------
என்ன? கதையை படிச்சீங்களா? நாம நம்ம கடமைகளை உதாசீனப்படுத்தக் கூடாது. நடக்கிற நல்லவை, தவறுகள் எல்லாத்துக்கும் நாமதான் பொறுப்பு. தவறுகளுக்கு வேறே யாரையும் காரணமா சொல்லக்கூடாது. சில சமயம் சில பேருக்கு, நல்லது செய்யக் கூட போராட வேண்டியிருக்கு. வேறே வழியில்லை, போராடியாவது சாதிச்சுதான் ஆகணும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Really impressive story .., like it so much.,thanx for posting
ReplyDeleteThank u for your comments, Sasi..
Delete